திட்டக்குடி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: போக்சோவில் 2 வாலிபர்கள் கைது
- திட்டக்குடி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
- மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழு தூரில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தொழு தூர், ராமநத்தம், வேப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வருவர். வேப்பூரில் இருந்து பிளஸ்-2 மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் பிளஸ்-2 மாணவியை பின்தொடர்ந்து 2 வாலி பர்கள் வந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் மாணவி யிடம் காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அந்த மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்ட மாணவியின் தாய் வாலிபரிடம் சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.
ஆனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவியிடம் மது போதையில் அதே வாலி பர்கள் சில்மிஷம் செய்த னர். இதுகுறித்து மாணவியின் தாய் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராமநத்தத்தை சேர்ந்த விஜய் (வயது 26), பிரவீன்குமார் (22) ஆகிய 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.