உள்ளூர் செய்திகள்

சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் குழந்தைகளின் சிறப்பு பவனி நடைபெற்றது.

பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி நெல்லை தேவாலயங்களில் குழந்தைகளின் சிறப்பு பவனி

Published On 2022-08-07 09:08 GMT   |   Update On 2022-08-07 09:08 GMT
  • தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது.
  • மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

நெல்லை:

தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெற்றன. மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

காமராஜர் சாலை, அந்தோணியார் ஆலய சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து உலகின் அனைத்து பகுதியிலும் வசிக்கும் குழந்தைகள் கல்வி, ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் மழைவளம் பெருக வேண்டியும், சமாதானம், சமத்துவம் உருவாக வேண்டியும் மழலைகள் ஜெபம் செய்தனர். தொடர்ந்து ஞாயிறு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News