உள்ளூர் செய்திகள்

சிறுவர்கள் ஊர்வலம் சென்ற காட்சி.

தென்காசி கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சிறுவர்கள் ஊர்வலம்

Published On 2023-09-07 14:33 IST   |   Update On 2023-09-07 14:33:00 IST
  • கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
  • கிருஷ்ணர், ராதை, முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்ட கண் கவர் ஊர்வலம் நடைபெற்றது.

தென்காசி:

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது கோவிலில் இருந்து கிருஷ்ணர், ராதை, முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்ட கண் கவர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் குழந்தைகளின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு குழந்தைகளை கைகளில் பிடித்தவாறு அழைத்துச் சென்றனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மட்டுமின்றி முக்கிய கோவில்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News