உள்ளூர் செய்திகள்

அறுவடை பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி மற்றும் உளுந்தை தூற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

உளுந்து அறுவடை பணிகள் மும்முரம்

Published On 2022-06-30 08:10 GMT   |   Update On 2022-06-30 08:10 GMT
  • தொடர்ந்து பெய்த மழை காரணமாக உளுந்து மகசூல் வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
  • குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7200 என்ற அளவில் தான் விலைபோகும் நிலை உள்ளது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே உள்ள தேவராயன்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடையில் சித்திரை பட்டத்தில் அதிகளவில் உளுந்து பயிர் செய்துள்ளனர். தற்போது அறுவடை செய்யும்பணி நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் உளுந்து மகசூல் வெகுவாக குறைந்துள்ளதால் செலவு செய்த தொகையே கிடைப்பது அரிதாக உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தேவராயன்பேட்டை உளுந்து சாகுபடி விவசாயிகள் கூறும்போது:-

எப்போதும் சித்திரை பட்டத்தில் ஆண்டுதோறும் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம். இந்தாண்டு சித்திரை பட்டத்தில் உளுந்து தெளித்த போது ஆரம்பத்தில் பெய்த மழை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாலும் உளுந்து செடிகள் நன்றாக வளர்ந்து பூ, வைத்து பிஞ்சு வைக்கும் பருவத்தில் பெய்த மழையாலும், அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக உரிய நேரத்தில் உளுந்து செடிகளை அறுவடை செய்யாததால் உளுந்து வயலிலேயே உதிர்ந்து வீணாகி விட்டதால் உளுந்து மகசூல் வெகுவாக குறைந்து போனது. மேலும் இந்தாண்டு உளுந்து விலை எதிர்பார்த்த விலை கிடைக்கலை. குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7200 என்ற அளவில் தான் விலைபோகும் நிலை உள்ளது. மொத்தத்தில் இந்தாண்டு உளுந்து பயிர் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது என்றார்.

Tags:    

Similar News