உள்ளூர் செய்திகள்

வாடகை வாகனங்கள் மீதான புகார்- செங்கல்பட்டு போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

Published On 2023-03-03 14:18 IST   |   Update On 2023-03-03 14:18:00 IST
  • வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன சட்டப்படி பதிவுசான்று ரத்து செய்யப்படும்.
  • சொந்த பயன்பாட்டு வாகனம் வாடகைக்காக இயக்கப்படுவதாக பல புகார்கள் வருகின்றன.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அதிகாரி விடுத்துள்ள செய்தி குறிப்பில், 'சொந்த பயன்பாட்டு வாகனம் வாடகைக்காக இயக்கப்படுவதாக பல புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் மற்றும் சாலை வரியாக ரூ.13,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மேற்கண்ட புகார்கள் தொடர்பாக சொந்த பயன்பாட்டு வாகனம் வாடகைக்காக அனுமதிக்கு புறம்பாக வாகனம் இயக்கப்படுவதாக தெரியவந்தால், வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன சட்டப்படி பதிவுசான்று ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News