உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். (தேரில் எழுந்தருளிய சக்கரபாணி பெருமாள்).

கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2023-03-06 15:50 IST   |   Update On 2023-03-06 15:50:00 IST
  • காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா.
  • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டீஸ்வரம்:

கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத

சக்கரபாணி கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கொத்தனார் சாரதிசுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

விழாவையொட்டி இன்று சிறப்பு மங்கள இன்னிசை முழங்க, வேத பாராயணம் ஒலிக்க சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா.. பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதனை தொடர்ந்து, அம்புஜவல்லிதாயார் சமேத ஆதிவராஹபெருமாள், ருக்மணி தாயார், சத்யபாமா தாயார், செங்கமல தாயார் சமேத ராஜகோபாலசாமி (பெரிய கடைத்தெரு) ஆகிய கோவில்களில் ரதாரோஹணமும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், சுதர்சன பக்தர்கள் செய்திருந்தனர்.

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் கிழக்கு,மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் அழகேசன், பேபி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News