லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் தேரோட்டம்
- அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
- ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள தாசனபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மது என்கிற ஹேம்நாத் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 5 நாட்கள், பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எருது விடும் விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.