வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
பரமத்தி வேலூர் வாரச்சந்தை இடம் மாற்றம்; பொதுமக்கள் வரவேற்பு
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வாரச்சந்தை நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது.
- இதற்கு பொதுமக்கள் வர வேற்பு தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வாரச்சந்தை நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வர வேற்பு தெரிவித்தனர். பர மத்திவேலூர் சுல்தான்பேட்டையில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். தற்போது சந்தை வளாகத்தில் புதிதாக செட் அமைத்து கான்கிரீட் தளம் அமைக்க ரூ. 1 கோடியை 47 லட்ச ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது.
இதனால் வாரச்சந்தை தற்காலிகமாக பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இட மாற்றம் செய்ய வியாபாரி களிடமும், பொது மக்களி டமும் பேரூராட்சி நிர்வாகம் கருத்து கேட்டனர். பொது மக்கள் இடமாற்றம் செய்ய வரவேற்பு அளித்ததின் பேரில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை முக்கோண பூங்காவிற்கு அருகே இடமாற்றம் செய்து நேற்று முதல் வார சந்தை நடைபெறுகிறது.இங்குள்ள பகுதிகளை இடமாற்றத்துக்காக சுத்தம் செய்யப்பட்டு கழிப்பிட வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி நிர்வாகம் செய்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- இடமாற்றம் செய்ய பலர் தடைகளை ஏற்படுத்தி வந்தனர். பழைய வார சந்தையில் கட்டிடப் பணிகள் நடப்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அங்கு கட்டிட பணிகள் முடியும் வரை இதே பகுதி யில் வார சந்தை இயங்க வேண்டும் என்றனர்.
வியாபாரிகள், விவசா யிகள் ஆதரவோடு வேலூர் பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையை இடமாற்றம் செய்தது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.