தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சந்திரயான்-3 வெற்றி விழா
- சந்திரயான்-3 வெற்றி விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி. துணை பிரிவு தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கிராஸ் சப்னா கலந்துகொண்டார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சந்திரயான்-3 வெற்றி விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது. இயற்பியல் துறை மாணவி மரியா ஆர்த்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். செயலர் வி.பி.ராமநாதன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி. துணை பிரிவு தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கிராஸ் சப்னா கலந்துகொண்டு மாணவர்களுக்கு சந்திரயான்-3 உருவான வரலாற்றை பற்றி எடுத்துரைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஸ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் பாலமுருகன், சுஜா பிரேம ரஜினி, ராய் ரிச்சி ரெனால்ட், பிருந்தாமலர் மற்றும் ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர். 2-ம் ஆண்டு மாணவி விஜய பாரதி நன்றி கூறினார். பல்வேறு துறைகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.