உள்ளூர் செய்திகள்

மூழ்கிய பயிர்களை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள்.

மழையால் சம்பா பயிர்கள் பாதிப்பு

Published On 2022-11-11 08:00 GMT   |   Update On 2022-11-11 08:00 GMT
  • இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.
  • தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.

தஞ்சாவூர்:

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 340 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நட்டு ஒரு வாரமே ஆன சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை, திட்டை, மாரியம்மன் கோயில், களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நாற்று நட்டு நான்கு நாட்களே ஆன நிலையில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் அனைத்தும் வேர்கள் அழுகி மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு மழை நீரில் மிதக்கிறது.

இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.

தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரை முற்றிலும் காப்பாற்ற முடியாது.

மீண்டும் புதிதாக செலவு செய்து புதிய நாற்று வாங்கி தான் நாங்கள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News