உள்ளூர் செய்திகள்

சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.


சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்

Published On 2023-02-27 14:36 IST   |   Update On 2023-02-27 14:36:00 IST
  • சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின்படி குப்பைகளை தரம் பிரித்து வழங்கியதில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள், மாணவ- மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • சான்றிதழ்களை நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரங்க ளுக்கான மக்கள் இயக்கத்தின்படி குப்பைகளை தரம் பிரித்து வழங்கியதில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கும், வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்கிய கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சான்றிதழ்களை நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார். இதில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அரிகரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், கவுன்சிலர்கள் அலமேலு, செல்வராஜ், விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News