நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயந்தி பேசியபோது எடுத்த படம்.
மாணவர்களுக்கு செல்போன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கூன வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஆப்களை பயன்படுத்துவது, செல்போ–னுக்கு அடிமை ஆவதை தவிர்க்க வேண்டும் என பேசினர். மனநல ஆலோசகர் ரமேஷ் மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் விஜி மற்றும் மாணவ- மாண–விகள் கலந்து கொண்டனர்.