கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 44 பேர் மீது வழக்கு
- சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
- அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 9000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
கோத்தகிரி,
போக்குவரத்து போலீசார் அடிக்கடி கோத்தகிரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
அந்த வகையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என சோதனை செய்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாதவர்களிடம் அபராதமும் வசூலித்தனர்.
அதன்படி, உரிய ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 44 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14,800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 9000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.