உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் 181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

Published On 2023-03-26 08:58 GMT   |   Update On 2023-03-26 08:58 GMT
  • போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

அரவேணு,

கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இதனால் கோத்தகிரி போலீசார் விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் சிலர் மலைப்பாதைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது என போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் அதிகப்படியான பாரம் ஏற்றி வந்து விதி மீறலில் ஈடுபடுகின்றன.

இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் துணை ஆய்வாளர் ஜான், ராஜேந்திரன் மற்றும் போலீசார் அரவேனு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி கடந்த 22-ந் தேதி அதிகபாரம் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் உள்பட மொத்தம் ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 23-ந் தேதி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.45 ஆயிரமும், 24-ந் தேதி ரூ.41 ஆயிரத்து 500-ம் அபராதம் விதிக்கப்பட்டது

நேற்று நடத்திய சோதனையில் போக்குவரத்து வீதிகளை மீறியதாக 53 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.51 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மொத்தம் 181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு ப்பதிவு செய்ய ப்பட்டு, ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News