கொண்டலாம்பட்டி அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற தச்சு தொழிலாளி பலி
- நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50) தச்சு தொழிலாளி. இவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.