உள்ளூர் செய்திகள்

கார் மோதி, புள்ளிமான் சாவு

Published On 2023-05-22 15:11 IST   |   Update On 2023-05-22 15:11:00 IST
  • அந்த வழியாக பெங்களூரை நோக்கி சென்ற கார் ஒன்று மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
  • படுகாயம் அடைந்த மான் சிறிது நேரத்தில் துடித்து துடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமளவில் வனப்பகுதிகள் உள்ளன இவற்றில் யானைகள், சிறுத்தை புலி கரடி மான் போன்ற விலங்குகள் ஏராளமாக உள்ளன இந்த விலங்குகள் அவ்வப்போது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் இடம்பெயர்ந்து கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று நேற்று மாலை கிருஷ்ணகிரி-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது.

அப்போது, அந்த வழியாக பெங்களூரை நோக்கி சென்ற கார் ஒன்று மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த மான் சிறிது நேரத்தில் துடித்து துடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள், இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News