உள்ளூர் செய்திகள்

ஆனந்த காவேரி வாய்க்கால்.

பூதலூர் அருகே பழுதான வாய்க்கால் கரை சாலையில் சீரமைக்க படுமா?

Published On 2023-03-16 09:16 GMT   |   Update On 2023-03-16 09:16 GMT
  • ஆனந்த காவேரி கால்வாய் கரையோரத்தில் வாய்க்காலில் நழுவி சரிந்து விழத் தொடங்கியது.
  • இடத்தில் நீண்ட கம்புகளை நட்டு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

பூதலூர்:

பூதலூர் ஒன்றியம் மாரனேரி கிராமத்திலிருந்து கல்லணை செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையில் மாரநேரி கிராமத்தில்இருந்து கச்சமங்கலம் செல்லும் வழியில் ஆனந்த காவேரி கால்வாய் கரையோரத்தில் வாய்க்காலில் நழுவி சரிந்து விழத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு சாலை சரிந்து விழதொடங்கிய நிலையில் அந்த இடத்தில் நீண்ட கம்புகளை நட்டு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த வழியாக ஏராளமான லாரிகள் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கல்லணைக்கும், திருக்காட்டுப்பள்ளிக்கும், ஒரத்தூர், மறுபுறத்தில் சோளகம்பட்டிக்கும், இந்தளூர் திருவெறும்பூருக்கும் சென்று கொண்டுள்ளன.

சாலை சரிந்து விழதொடங்கிய இடத்தில் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு, நீண்ட கம்பு ஊன்றி சிவப்பு துணியை கட்டி உள்ளனர்.

இந்த இடத்தில் சாலையோரத்தில் நிரந்தரமாக தடுப்புச்சுவர் அமைத்து சாலையை சீரமைத்து தருவதற்கு பதிலாக கண்டுகொள்ளாமல் சம்பந்தப்பட்ட துறையினர் மெத்தன போக்கில் இருப்பதாக இந்த பகுதி மக்கள் குறைபட்டு கொள்கின்றனர்.

தற்பொழுது ஆனந்த காவேரி வாய்க்காலில் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அடுக்கப்பட்ட மணல் மூட்டைகளை அகற்றி நிரந்தரமாக தடுப்புச் சுவர் கட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News