உள்ளூர் செய்திகள்
பணகுடியில் செல்போன் கடையை உடைத்து திருட்டு
- ஆண்டனி பிலிப் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
- கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஆண்டனி பிலிப் (வயது 36). இவர் வடக்கன்குளம்-காவல்கிணறு சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிய அவர் நேற்று கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருந்த செல்போன்கள், புளூடூத் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொரு ட்கள் திருடப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக ஆண்டனி பிலிப் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.