உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து மணலை எடுத்து வந்து விளைநிலங்களில் நிரப்பும் காட்சி.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணலை எடுத்து வந்து விளைநிலங்களில் கொட்டி விற்பனை

Published On 2023-05-19 08:38 GMT   |   Update On 2023-05-19 08:38 GMT
  • வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர்.
  • பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கடலூர்:

காட்டுமன்னா ர்கோவில் ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான டன் மணல் கனரக வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டு வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்களுக்கு மணலை விற்பதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொது மக்களுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த மணல் கொட்டி விற்பனை செய்வதற்கு விளைநிலத்தை வீணடிப்பததையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து நேரடியாக மணலை அள்ளுவதற்கு வழிவகை செய்யாவிட்டால் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அகில இந்தியவிவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News