திருநாவலூர் அருகே தலையின் பின்புறம் காயங்களுடன் சாலையில் இறந்து கிடந்த கொத்தனார்: விபத்தா? கொலையா? என போலீசார் விசாரணை
- பாரதிராஜா சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா நகர் மன்னார்குடி கிராமத்ை்த சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 32). சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார். இவர் விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்தார். நேற்று இரவு இவரும், இவரது நண்பர்களான கந்தசாமிபுரம் மணிகண்டன் (32), முருகன் (30) ஆகியோர் கெடிலம் டாஸ்மாக்கில் மது அருந்தினர். மது அருந்திவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினர். சேந்தமங்கலம் சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றனர். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் பாரதிராஜா சாலையிலேயே இறந்து கிடந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு திருநாவலூர் போலீசார் விரைந்தனர்.
அங்கு இறந்து கிடந்த பாரதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பாரதிராஜாவிற்கு தலையின் பின்பக்கம் தவிர வேறு எங்கும் காயம் இல்லை. இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவுடன் மது அருந்திய மணிகண்டன், முருகனிடம் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிராஜா விபத்தில் இறந்து போனாரா? அல்லது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.