உள்ளூர் செய்திகள்

கனிமொழி எம்.பி., மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை பரிமாறிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிகளில் காலை உணவு திட்டம்-கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

Published On 2023-08-25 09:08 GMT   |   Update On 2023-08-25 09:08 GMT
  • மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
  • மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 819 மாணவ,மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

தூத்துக்குடி:

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.

கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இப்பள்ளியில் மொத்தம் 125 மாணவ- மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

கலந்து கொண்டவர்கள்

முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் கவுரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன், தாசில்தார் பிரபாகரன், தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, அய்யனடைப்பு ஊராட்சி தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News