உள்ளூர் செய்திகள்

புத்தகங்களோடு பள்ளி மாணவ-மாணவிகள்.


தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள்

Published On 2022-07-15 09:46 GMT   |   Update On 2022-07-15 09:46 GMT
  • பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
  • பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

கடையம்:

அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரண மலை முருகன் கோவில் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் மலை மீதிருந்து சுனை நீரை கலசத்தில் எடுத்து வந்து அடிவாரத்தில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.இதனை அடுத்து விவசாயம் தழைக்க, விவசாயி செழிக்க வருண கலச பூஜையும் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை மலை அடிவாரம் மற்றும் மலை மீதுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நாள் முழுதும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தற்போது இந்த கோவிலின் அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதை இப்பகுதி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் விதமாக புத்தகம் சேமிக்கும் பணிகள் நடக்கிறது.

தோரணமலை அருகிலுள்ள மடத்தூர் மற்றும் சிவநாடானூர் கிராம பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது தலைமை ஆசிரியரோடு வருகை தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் சேதுராமலிங்கம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன், பாலன் தொழிலதிபர் கே.டி.ஆர். சுந்தர், பள்ளி நிர்வாகிகள் முருகன், சவந்திர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

மாணவர்களிடையே கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தும் நேரம் அதிகமாகி, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவதை தடுத்து, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News