உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணின் கையில் குத்தப்பட்டிருந்த பச்சை.

கடையநல்லூர் கிணற்றில் உடல் மீட்பு- கொன்று வீசப்பட்ட இளம்பெண் யார்?

Published On 2023-08-11 14:42 IST   |   Update On 2023-08-11 14:42:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு சாக்கு மூட்டையை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
  • சமீபத்தில் மாயமான இளம் பெண்களின் பட்டியலை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு ஒன்று உள்ளது.

இளம்பெண் கொலை

இந்த கிணற்றில், ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சாக்கு மூட்டையை கயிறு கட்டி மேலே எடுத்து இளம்பெண் உடலை மீட்டனர்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வலது கையில் எம்.வி. என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் 'ஹார்டின்' படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு சாக்கு மூட்டையை ஏற்றி வந்தது தெரிய வந்தது. எனவே அவர்கள் தான் அந்த பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

2 தனிப்படை

இதுதொடர்பாக விசாரணை நடத்து வதற்காக டி.எஸ்.பி. அசோக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி, கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்ப ட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் மாயமான இளம் பெண்களின் பட்டியலை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அழுகிய நிலையில் காணப்படும் அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் கையில் உள்ள குறியீடு ஆகியவற்றை பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News