உள்ளூர் செய்திகள்

புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்

Published On 2022-10-28 14:47 IST   |   Update On 2022-10-28 14:47:00 IST
  • ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
  • கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரவேணு,

கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நியமன பொது செயலாளராக முகமது சலீம், இணைசெயலாளராக வினோபாபோப், கூடுதல் செயலாளராக பீட்டர், செயற்குழு உறுபினராக சுரேஸ், சிவகிருஸ்னா ஆகியோர் நியமனம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி. செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பீட்டர், வினோபாபோப், லெனின்மார்க்ஸ், சிவகிருஸ்னா, கிரேஸி, ரோஸ்லின், லலிதா, யசோதா, விக்டோரியா, முகமது இஸ்மாயில் மற்றும் வால்டர், பிரேம்செபாஸ்டியன், இணை செயலாளர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News