உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்.

பா.ஜனதா அரசை தூக்கி எறியும் நாள் நெருங்கிவிட்டது - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆவேசம்

Published On 2023-07-08 09:03 GMT   |   Update On 2023-07-08 09:03 GMT
  • நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

நெல்லை:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான, வழக்கில் அவரது மேல் முறையீடு மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

நாங்குநேரியில் போராட்டம்

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் பொரு ளாளர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல். பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல், அவர் தெரி விக்கும் குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாமல், அவர் பாராளு மன்றத்துக்கு வருவதையே தடுக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இப்படியொரு நிகழ்வை அரங்கேற்றி இருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல், மக்கள் ஆதரவு காங்கிரசுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்து பயந்து போய் இருக்கிறது மத்திய அரசு. அதனால்தான், ராகுல்காந்திக்கு எதிரான செயல்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜனநாயகத்துக்கு எதிரான, மக்கள் விரோத பா.ஜ.க. அரசை மக்கள் தூக்கி எறியும் நாள் நெருங்கி விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள். மோடியை வீழ்த்திவிட்டு, ராகுல்காந்தி நாட்டின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், மாலையில் அவர்களை விடுவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

இதற்கிடையே நேற்று மாலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோனை கூட்டத்தை நடத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.

சாலை மறியல் போ ராட்டத்தில் தொண்ட ர்களுடன் கைதாகி, திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டதால், ஆலோனை கூட்டம் நடத்த முடியாமல் போனது.

ஆனாலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் பேச வேண்டிய விஷய ங்களை, கைதாகி அடைக்க ப்பட்டு இருந்த திருமண மண்டபத்திலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸர் கட்சியினர் எப்படி எதிர்கொள்வது? பூத் கமிட்டியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? என்பது விரிவாகப் பேசினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வட்டாரத் தலைவரும் தங்கள் பகுதியில் இதுதொடர்பான கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக அனை வரும் கடுமையாக உழைக்க வேண்டும். நம் இலக்கு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது ஒன்றுதான். அதற்காக ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டரும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும், தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்றும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News