உள்ளூர் செய்திகள்

பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

நெல்லையில், பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-02 14:52 IST   |   Update On 2023-05-02 14:52:00 IST
  • தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.
  • ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.

இதனை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தி.மு.க அரசை கண்டித்தும் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசி பாலா முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட பொது செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செய லாளர் வக்கீல் வெங்கடா ஜலபதி என்ற குட்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் ஜெட் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயசித்ரா, மண்டல தலைவர்கள் குரு கண்ணன், பெரியதுரை உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News