உள்ளூர் செய்திகள்

மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்.

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை திறக்க கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-07 14:57 IST   |   Update On 2023-02-07 14:57:00 IST
  • ஸ்மார்ட்சிட்டி பணிகள் மந்தமாக நடைபெறுவதாக கூறி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • சந்திப்பு பஸ்நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் கீழ் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், முத்துபலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர்கள் வக்கீல் குட்டி என்ற வெங்கடாசலபதி, நாகராஜன், மேகநாதன், மண்டல தலைவர்கள் பெரிய துரை, குரு கண்ணன், மலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மந்தமாக நடைபெற்று வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சந்திப்பு பஸ்நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும், ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் அதற்கான கால அளவு குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News