உள்ளூர் செய்திகள்
டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா புகார்- கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு
- ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் செய்யப்பட்டது.
- பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் செய்யப்பட்டது.
பா.ஜனதா வக்கீல் பிரிவு துணை தலைவரான ஜி.எஸ்.மணி அளித்துள்ள புகாரில், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.