உள்ளூர் செய்திகள்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட உண்டியல்கள்

Published On 2022-11-24 09:29 GMT   |   Update On 2022-11-24 09:29 GMT
  • சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
  • இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

நாமக்கல்:

சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள|

காளிப்பட்டி கந்தசாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கோவில் நிர்வாகம், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இக்கோவிலில் உண்டி யல் வசூலில் முறைகேடு நடப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று குமாரபாளையம் சரக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் அதி காரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 4 உண்டியலுக்கும் முத்திரை இட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News