உள்ளூர் செய்திகள்
இரு தரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு
- 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.
- 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை,
சிங்காரப்பேட்டை அருகே உள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மயில் (29). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி (50). உறவினர்கள். இவர்களின் நிலம் அருகருகில் உள்ளது. இவர்கள் இடையே நில பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.
இதில் காயம் அடைந்த மயில் கொடுத்த புகாரின் பேரில் பழனி (50), கோகிலா (33), மஞ்சுளா (46) ஆகிய 3 பேர் மீது சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல கோகிலா கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் மயில் (29), சுப்பிரமணி (58), ஜெயா (55), சாந்தி (48) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.