உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

Published On 2023-05-18 14:47 IST   |   Update On 2023-05-18 14:54:00 IST
  • எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
  • இன்று காலை சிகிச்சை பலனின்றி மவுலிஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் ,ெபன்னாகரம் அருகே உள்ள கொச்சரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் மவுலிஸ்வரன் (வயது 22). இவர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை மல்லாபுரம் ஏரி அருகே இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மவுலிஸ்வரனை அந்த சாலை வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி மவுலிஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News