உள்ளூர் செய்திகள்
புதிய அலுவலகம் கட்ட பூமி பூஜை நடந்தது.
திருவிசநல்லூர் ஊராட்சி மன்றத்தில் புதிய அலுவலகம் கட்ட பூமி பூஜை
- புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன் தலைமையில் நடந்தது.
- சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
சுவாமிமலை:
திருவிசநல்லூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜி.கே.எம் ராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணியை துவக்கி வைத்தார் .
இதில் திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன் ,வீரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள்சுரேஷ் பாபு, ரேவதி, பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.