உள்ளூர் செய்திகள்

தோளனூர் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை ஊத்தங்கரை தொகுதி

எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தொடக்கி வைத்த காட்சி. 

மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை

Published On 2023-04-25 16:03 IST   |   Update On 2023-04-25 16:03:00 IST
  • 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.
  • புதிய கழிவு நீர் கால்வாய் கட்ட ரூ.15 லட்சம் மதிப்பிட்டிலும் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் கண்ணன் ட அள்ளி ஊராட்சி தோளனூர் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட ரூ.19 லட்சம் மதிப்பீட்டிலும், அதே போல் கண்ணன்டஹள்ளி பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய கழிவு நீர் கால்வாய் கட்ட ரூ.15 லட்சம் மதிப்பிட்டிலும் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெகன், ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, கந்தசாமி, கண்ணன்ட அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் மோகன் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் கலைச்செல்வி பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News