உள்ளூர் செய்திகள்
ஒடசல்பட்டி புதூரில் சாலை அமைக்க பூமி பூஜை
- ஒடசல்பட்டி புதூரில் ரூ.33.60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
- புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் பூமிபூஜை நடந்தது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் மணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி புதூரில் ரூ.30.60 லட்சம் மதிப்பில் புதூர் மாரியம்மன் கோவில் முதல் சுடுகாடு வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலை மையில் பூமிபூஜை நடந்தது.
இதில் துணை செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன், ஆண்டி கவுண்டர், மாவட்ட அமைப்புசார ஒட்டுனர் சங்க அமைப்பாளர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், பாண்டுரங்கன், குமரவேல், சின்னதுரை, பச்சியப்பன், மதன்பாலாஜி உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.