உள்ளூர் செய்திகள்

மகளிர் நலனுக்காக பணியாற்றிய மீனா சுப்பிரமணியனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது

Published On 2024-08-15 11:24 IST   |   Update On 2024-08-15 11:24:00 IST
  • நோயாளிக்கு ரூ.250 செலவில் டயாலிசிஸ் செய்திட வழி வகுத்துள்ளார்.
  • மாணவ-மாணவிகளுக்கு பிரயாஸ் டியூஷன் மையம் நடத்தி வருகிறார்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனா சுப்பிரமணியன் என்பவர் பிரயாஸ் அறக்கட்டளை மூலமாக சமூக சேவை செய்து வருகிறார். ஆடைகள், மிதியடி மற்றும் வீட்டு அலங்காரங்கள் செய்வதற்கு துறை திறன் கவுன்சில்களுடன் இணைந்து பிரயாஸ் அறக்கட்டளை சான்றளிக்கப்பட்ட தொழிற்பயிற்சி படிப்புகளை கற்பிக்க வழிகாட்டியாக உள்ளார்.

இதன் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

மீனா சுப்பிரமணியன் தலைமையில் 2012-ம் ஆண்டு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் 10 படுக் கைகள் கொண்ட டயாலிசிஸ் வசதி உள்ள மருத்துவ மையம் நிறுவப்பட்டது. மிகக் குறைந்த செலவில் ஒரு நோயாளிக்கு ரூ.250 செலவில் டயாலிசிஸ் செய்திட வழி வகுத்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பிரயாஸ் டியூஷன் மையம் விருகம்பாக்கத்தில் நடத்தி வருகிறார். இதன் மூலம் தினமும் 60 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர்.

10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தடையில்லாமல் மேற்படிப்பு தொடர கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார்.

பெண்களுக்கும், சமுதா யத்திற்கும் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் மீனா சுப்பிரமணியனின் சமூக சேவையை பாராட்டி 2024-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை 2014-ம் ஆண்டு முதல் ஏழை, ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோய் வாய்ப்பட்டோர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

எனவே மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுப் பணிக்கான நீண்ட கால சிறப்பான சேவையைப் பாராட்டி "சிறந்த தொண்டு நிறுவன"த்திற்கான விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News