உள்ளூர் செய்திகள்
அன்னூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை மறுநாள் காத்திருப்பு போராட்டம்
- காரேகவுண்டம்பாளையம் ஊராட்சி 3-வது வார்டு பெரியார் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.
- உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காரேகவுண்டம்பாளையம் ஊராட்சி 3-வது வார்டு பெரியார் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.
இந்த பகுதியில் பொதுக்கழிப்பிடம் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு கழிப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு பூஜை நடைபெற்றது.
ஆனால் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் நாளை மறுநாள் காரைக்கவுண்டம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.