உள்ளூர் செய்திகள்

வானூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

வானூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் போராட்டம்

Published On 2022-06-22 09:24 GMT   |   Update On 2022-06-22 09:24 GMT
  • வானூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
  • நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தைலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு பகுதியில் நிலமற்ற ஆதி திராவிட விவசாயிகளுக்கு 11 ஏக்கர் நிலம் 1965-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் வானூர் தாலுகா அலுவலகம் முன்புபோராட்டம் செய்தனர். அப்போது நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

அதன்பின்பு தாசில்தார் (பொறுப்பு)பிரபு வெங்கடேசிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News