உள்ளூர் செய்திகள்

கடற்கரை-தாம்பரம் இரவு ரெயில் நாளை முதல் ரத்து

Published On 2023-11-28 10:46 GMT   |   Update On 2023-11-28 10:46 GMT
  • பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
  • தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News