உள்ளூர் செய்திகள்

விசைப்படகுகள் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணி நடந்தது.

சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிப்பு பணி மும்முரம்

Published On 2023-06-05 10:16 GMT   |   Update On 2023-06-05 10:16 GMT
  • இன்னும் 10 நாளில் மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளது.
  • மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேராவூரணி:

தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி முடிய 60 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க நடைபெற மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிபட்டினம் துறைமுகத்தில் 147 விசைப்படகுகள் உள்ளது. விசைப்படகுகள் வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் 10 நாளில் மீன் பிடி தடைக் காலம் முடிய உள்ள நிலையில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிப்பு நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்து புதிய வர்ணம் பூசும் பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News