பொன்னேரி அருகே கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
- பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.
- பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடிவருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு சென்றனர்.
காலையில் பக்தர்கள் வந்த போது கோவிலில் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் மூகமூடி அணிந்த மர்மநபர் சுத்தியலால் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கோணி பையில் அள்ளி செல்வது பதிவாகி இருந்தது. கோவில் உண்டியலில் ஒரு வருடமாக பணம் எடுக்காததால் அதில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இருந்து இருக்கலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடிவருகிறார்கள்.
பொன்னேரி, மீஞ்சூர், பகுதிகளில் அடிக்கடி திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.