பெண்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்ட காட்சி.
ஆடிப்பூர வழிபாட்டில் பெண்களுக்கு வளையல் அணிவிப்பு
- அம்மன் கோவில்களில் ஆடிமாதம் பூரம் நட்சத்திர நாளன்று ஆடிப்பூர வழிபாடு நடைபெறும்
- ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்:டு பிரசாதமாக பெண்களுக்கு அணிவிக்கப்பட்டது.
ஆத்தூர்:
அம்மன் கோவில்களில் ஆடிமாதம் பூரம் நட்சத்திர நாளன்று ஆடிப்பூர வழிபாடு நடைபெறும். அன்றைய நாட்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வளையல்கள் பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதன்படி ஆத்தூர் வண்டிகாளியம்மன் கோவில், சீவல்சரகு மாரியம்மன் கோவில், சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில், பாலநாகம்மாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் 9 வகை சாதங்களும் அம்மனுக்கு படையல் இடப்பட்டது. அதன்பின்பு சுமங்கலி, கர்ப்பிணி பெண்களுக்கு அந்த வளையல்கள் அணிவிக்கப்பட்டன. சாமிக்கு படையிலிடப்பட்ட சாதங்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த வளையல்களை கன்னிப்பெண்கள் அணிந்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும், திருமணமான பெண்கள் அணிந்து கொண்டால் விரைவில் வளைகாப்பு நடக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது.