உள்ளூர் செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு900 வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகை

Published On 2023-05-01 09:56 GMT   |   Update On 2023-05-01 09:56 GMT
  • பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.

நாமக்கல்:

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு, பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.

கலெக்டர் ஸ்ரேயாசிங் மேற்பார்வையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரியில் இருந்து இறக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

இந்த பாதுகாப்பு அறையில், ஏற்கனவே 4,214 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,622 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 970 வாக்களர்கள் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஆகிய எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பில் உள்ளன.

அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News