உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசு பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம்

Published On 2023-07-08 09:29 GMT   |   Update On 2023-07-08 09:29 GMT
  • திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது.
  • சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

ஆசிரியர்கள் தெய்வ சகாயம், பாஸ்கரன், தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் நடராஜன் வரவேற்றார்.

வட்டார வளமைய சிறப்பு பயிற்சி ஜானகிராமன் பேசுகையில், சமச்சீர் உணவு அல்லது சரிவிகித உணவு என்பது வயதிற்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ற வகையில் அளவிலும் குணத்திலும் தேவைக்கேற்ற உணவுப் பொருள்களைக் கொண்டதாகும்.

இவ்வுணவு உடலுக்கு வேண்டிய கலோரிகள், புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அனைத்தையும் போதுமான அளவு கொடுத்து சிறிதளவு எதிர்பாராத தேவைக்கும் பயன்படக்கூடிய அளவில் உணவுச் சத்துக்களைக் கொடுக்கிறது.

சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

உடலின் இயக்கங்கள் சரிவர நடைபெற்று, உடல் நலமும் நல்ல முறையில் இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்க ட்டைகள் மாண வர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி செய்து இருந்தார்.

ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், ஆடின் மெடோனா, அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News