உள்ளூர் செய்திகள்

ஊர்வலத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்.

அம்பையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா மாசி மகா ஊர்வலம்

Published On 2023-03-05 08:58 GMT   |   Update On 2023-03-05 08:58 GMT
  • இந்த ஆண்டுக்கான மாசி மகா ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
  • ஊர்வலத்திற்கு முன்பாக சிறுவர், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது.

சிங்கை:

அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதியில் ஒவ்வொரு ஆண்டும் அய்யா அவதார தினத்தன்று மாசி மகா ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மகா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார்.

ஊர்வலம் தொடங்கி மேற்கு நோக்கி அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் வழியாக அகஸ்தியர் கோவில், வண்டி மறிச்சி அம்மன் இராணிஸ் ஸ்கூல் வழியாக தென்காசி சாலை யில் வாகைக்குளம் விலக்கு வழியாக வாகைக்குளம் வாகைபதிக்கு சென்றடைந்தது.

இந்த மகா ஊர்வலத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 32 பதிகளில் இருந்துஅய்யா வைகுண்டர் அனுமன்,பல்லக்கு,தொட்டில்,கருடன், காளி,காளை,நாகம்,வேல், பூம்பல்லக்கு போன்ற பல வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி மக்களுக்கு அருள் ஆசி வழங்கி ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்திற்கு முன்பாக சிறுவர், சிறுமிகளின் கோலாட்டமும், இளைஞர்களின் செண்டை மற்றும் சிங்காரி மேளமும், அய்யா ஹர ஹர என்ற கோஷம் முழங்கஊர்வலம் நடைபெற்றது. அம்பாச முத்திரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

ஊர்வலம் வாகைக்குளம் வாகைபதி வந்தடைந்ததும் அங்கு சிறப்பு பணிவிடைகள் செய்யப்பட்டு அனை வருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பதிகளுக்கும் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி அன்பு கொடி மக்களும், சுற்றுவட்டார அன்பு கொடிமக்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News