உள்ளூர் செய்திகள்

 விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்தபடம்.  

பிளாஸ்டிக் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-09-26 13:14 IST   |   Update On 2022-09-26 13:14:00 IST
  • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக்கின் அதன் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
  • இந்த ஊர்வலத்தில் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூ ராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதன் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் மணி தலைமை வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கண்காட்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியில் பொதுமக்கள் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்தக் கூடாது என தனித்தனியாக வகைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் ரமேஷ், ராமச்சந்திரன், நாச்சிமுத்து, பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை, துப்புரவு அலுவலர் ரவி, மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News