உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள். 

குழந்தை வளர்ச்சி பணிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-09-28 07:58 GMT   |   Update On 2022-09-28 07:58 GMT
  • தாரமங்கலம் வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்து மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
  • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் வளர் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்து மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தாரமங்கலம் பவளத்தானுர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரத்த சோகையின் அறிகுறிகள், ரத்தசோகை தடுப்புமுறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அடிப்படை உண்மைகள், ஊட்டச்சத்து உணவு ஏன் அவசியம்? சக்தி தரும் உணவுகள், தானிய வகைகள், கிழங்கு வகைகள், நுண்ணுட்ட சத்து நிறைந்துள்ள உணவுகள் குறித்த விழிப்புணர்வு விளக்க பிரசார நோட்டீஸ் வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் வளர் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதா, 2-ம் நிலை மேற்பார்வையாளர் தனலட்சுமி, வட்டார திட்ட உதவியாளர் ரமேஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்–கள், உதவியாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News