உள்ளூர் செய்திகள்

மாணவ- மாணவிகள் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சென்ற போது எடுத்த படம்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகளுடன் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-25 09:43 GMT   |   Update On 2023-01-25 09:43 GMT
  • 13-வது தேசிய வாக்காளர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நெல்லை:

13-வது தேசிய வாக்காளர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற வாசகத்தை முன்னிறுத்தி இந்த ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வாக்களிப்பது உரிமை என்பது தொடர்பான விழிப்புணர்வு கோலப் போட்டியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பலவித மான ரங்கோலி கோலங்களை வரைந்தனர்.

பேரணி

தொடர்ந்து கல்லூரி மாணவிகள் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஆடி வாக்களிப்பதன் அவ சியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர். அதன் பின்னர் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை நெல்லை மாவட்ட பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் குமார், மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலக த்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி வண்ணார் பேட்டை, முருகன்குறிச்சி வழியாக பாளையை சென்றடைந்தது. பேரணியின் போது வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகங்களை முன்னிறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News