உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
- பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தூய்மை நடைபயணத்தை ஊராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
சூலூர்,
சூலூர் வட்டாரம், அரசூர் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுகாதார உறுதிமொழி மற்றும் தூய்மை நடைபயணம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சதீஷ்குமார் தொடங்கி வைத்து தூய்மை, கழிப்பறைகள் பயன்பாடு, குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், நெகிழி பை பயன்பாட்டிற்கு தடை குறித்து விளக்கினார். தூய்மை நடைபயணத்தை ஊராட்சித் தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோோர் ஆசிரியர் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், உன்னத் பாரத் அபியான் திட்ட மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலாளர் கணேசமூர்த்தி, பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நடைபயணம் அரசூர் ஊராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி சரவணம்பட்டி சாலை வழியாக கிழக்கு அரசூர் ஊருக்குள் வீடுகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் ஊராட்சி அலுவலகத்தில் முடிந்தது. ஊராட்சி துணைத்தலைவர் சுதா நன்றி தெரிவித்தார்