உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-08 10:17 GMT   |   Update On 2023-10-08 10:17 GMT
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் அனைத்து துறைகள் சார்பில் 5-ந் தேதி தொடங்கி வரும் 11-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தஞ்சை யில் இன்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வழிகாட்டுதலில் அனைத்து துறைகள் சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கியது.

இப்பேரணியினை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத் தீயணைப்பு அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் முனியாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உமா மகேஸ்வரி, சி தொண்டு அமைப்பு நிறுவனர் முனைவர் ஜெகதீஸ்வரி, ரெட்கிராஸ் துணைச் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைந்த சேவை மைய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்கள் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள், பள்ளி ,கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று மீண்டும் விளை யாட்டு மைதானம் வந்தடைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் செய்திருந்தார்.

Tags:    

Similar News