உள்ளூர் செய்திகள்

சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


ஆத்தூரில் சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு

Published On 2023-10-01 10:05 IST   |   Update On 2023-10-01 10:05:00 IST
  • சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்
  • சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து முகாமில் விளக்கப்பட்டது.

செம்பட்டி:

செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சி பகுதியில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் பூஞ்சோலை 10-வது வார்டு, மாதா கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, அக்ரஹார தெரு, ஆலம்பட்டி, நந்தனார் தெரு, சவேரியார் கோவில் தெரு, பூஞ்சிலை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது.

சமையல் செய்யும் பெண்களுக்கு கேஸ் நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை மற்றும் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து முகாமில் விளக்கப்பட்டது.

Tags:    

Similar News